Gold Savings Scheme

அக் ஷயம் தங்க நகை சேமிப்புத் திட்டம்

இத்திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணம் அன்றைய தங்க நிலவரத்தின்படி தங்கமாக கணக்கில் வைக்கப்படும் . 6 மாத & 12 மாத இறுதியில் நீங்கள் செலுத்தியிருக்கும் பணத்தின் மதிப்பிற்கேற்ப தங்கத்தின் அளவும் இருக்கும்.

விதிமுறைகள்

  • இந்த திட்டத்தின் மூலம் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி 6 மாதங்கள் & 12 மாதங்கள் முழுமையாக முடிந்தபின் உறுப்பினர்களின் கணக்கில் சேர்ந்துள்ள எடைக்கு தங்க நகை பெற்றுக்கொள்ளலாம் . மாதாந்திர குறைந்த பட்ச தவணை ரூ.1000/- , ரூ.2000/- , ரூ.5000/-, ரூ.10000/- ஆகும்
  • இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் திட்டம் முடியும் வரை தங்க நாணயங்களை செய்கூலி, சேதாரம் & GST இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். மாதாந்திர தவணைத் தொகை பிரதிமாதம் தவறாமல் செலுத்தப்படவேண்டும். தவணை தொகையை தவறாமல் செலுத்துவோருக்கு மட்டுமே திட்டத்தின் சலுகைகள் பொருந்தும் .
  • மாதத் தவணையை செலுத்தத் தவறினால் தாமதமாக செலுத்தும் காலத்திற்கேற்ப திட்டம் முடிவு காலமும் தாமதமாகும் .
  • பலவிதமான சேதாரங்களில் நகைகள் எடுத்தால் சராசரி  கணக்குப்படிதான் சேதாரம் கணக்கிடப்படும் 
  • தவணை செலுத்தப்படுகின்ற தேதியில் தங்க நகைச்  சங்க விலை நிலவரப்படி உறுப்பினர்கள் கணக்கில் தங்கம் வரவு வைக்கப்படும் .6 மாதம் & 12 மாதம் முழுமையாக தவணைத் தொகை செலுத்தியபின் உறுப்பினர்கள் கணக்கில் உள்ள எடைக்கு செய்கூலி , சேதாரம் & GST (6 மாதம் உண்டு & 12 மாதம்  இல்லை) இல்லாமல் தங்கள் விருப்பம்போல் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினர்கள் கணக்கில் உள்ள எடைக்கு கூடுதலாக நகைகள் வாங்கினால் தங்கள் கணக்கில் உள்ள எடை போக மீதமுள்ள எடைக்கு சேதாரம், GST கணக்கிடப்படும் .
  •  இத்திட்டத்தில் தங்க நகைகள், தங்க காசுகள் & வெள்ளி நகைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் . செய்கூலி இல்லை, சேதாரம், GST இல்லை என்ற சலுகை தங்க நகைகள், தங்க காசுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  •  இத்திட்டத்தில் தங்க நகைகள், தங்க காசுகள் & வெள்ளி நகைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் . செய்கூலி இல்லை, சேதாரம், GST இல்லை என்ற சலுகை தங்க நகைகள், தங்க காசுகள் & வெள்ளி நகைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • தவணைத் தொகையை  ரொக்கமாகவும் திருப்பி பெற்றுகொள்ளலாம்.
  • Gpay, Phonepe DD, NEFT, RTGS, Credit Card, debit card, காசோலை மூலம் பணம் செலுத்தலாம்
  • இதில் குறிப்பிட்டுள்ள சலுகைகள் தவிர வேறு சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.